
அண்மையில் என் மாமா பையன் கல்யாணத்திற்கு போயிருந்தேன். என் சிறுவயது ஞாபகங்கள் நினைவிற்கு வந்தன.
சிறு வயதில் உறவுக்காரச் சிறுவர்களுடன் கல்யாண மண்டபத்தில் ஓடி விளையாடியது,
மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் அருகே அமர்ந்து காரில் வந்தது,
ஒரு சிறு குழு அமைத்து அனைவருக்கும் தேனீர் கோப்பைகள் அளித்தது,
இரவு கண் விழித்து தேங்காய் பொட்டலங்கள் செய்தது,
வீடியோவில் வருவதற்காக மேடையிலேயே நின்றது

இது மாதிரி பல நிகழ்வுகள் நினைவலைகளில் ஓடியது. இப்போது நினைத்தாலும் அந்த சிறுவயது காலங்கள் மாதிரி ஓடி விளையாட முடியாது. ஒரு அருமையான திரைப்பாடல் நினைவிற்கு வந்தது.
"துள்ளித் திறிந்ததொரு காலம், பள்ளிப் பயின்றதொரு காலம்,
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே..."
என்னை பொறுத்தவரை அது நான் இப்போது இழக்கின்ற காலம் :-(