தேடுங்கள்

Friday, June 19, 2009

தேனீர் பிறந்த கதை


மூலிகை மருத்துவத்திற்குப் புகழ் பெற்றது சீனா. சீனாவின் சக்கரவர்த்தியான பிஷன் நுங் என்பவர் ஏராளமான செடிகளின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தவர். இதனால் இவர் தெய்வீக மருத்துவர் என்று சீன வரலாற்றில் குறிக்கப்படுகிறார். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் இவர்தான். இவர் ஒருமுறை தமது படைமுகாம் அருகே ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். அருகில்இருந்த சில செடிகள்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டன.

தண்ணீரைக் கொதிக்க வைத்த போது அடுப்பில் இருந்த செடிகளில் இருந்த இலைகள் காற்றில் பறந்து பாத்திரத்தினுள் விழுந்தன. தண்ணீர் அசுத்தமாகி விட்டதே என்று நினைத்த சக்கரவர்த்தி அதைக் கொட்ட முயற்சித்தார். ஆனால் பாத்திரத்தில் இருந்து வந்த ஒருவித நறுமணம் அவரைத் தடுத்தது. அந்தத் தண்ணீரையே குடித்தார். அது சுவையாகவும், உடலுக்கு சற்று உற்சாகத்தையும் கொடுத்தது. இதுதான் தேனீர் பிறந்த கதை.

நன்றி: தினகரன் இணையம்

No comments:

Post a Comment