தேடுங்கள்

Saturday, September 24, 2016

காவேரி


Image result for kaveri river map 

நீர் எரியாது என்பது அடிப்படை அறிவியல்,
நீர் எரியும் என்று நிரூபித்தது ஒரு மாநிலம்,
எரிந்ததை அணைக்க உதவியதும் அதே நீர்,
தோன்றிய இடத்திற்கு மட்டும் சொந்தமல்ல ஆறு,
பல தேசங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது சில நதிகள்,
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு ஓடும் ஆற்றில் தான் எத்தனை அரசியல்.


Tuesday, May 1, 2012

நினைவுகள்

நினைவுகள் இனிக்கும், கடந்து வந்த பாதை பசுமையாய் இருப்பவனுக்கு
நினைவுகள் கசக்கும், கடந்து வந்த பாதை முற்புதராய் இருப்பவனுக்கு
நினைவுகள், அது காலத்தின் கண்ணாடி
நினைவுகள், அது அடிமனத்தின் சுவடுகள்
நினைவுகள், அது மறதியின் எதிரி
நினைவுகள், அது கிழவனை குழந்தையாக்கும்
நினைவுகள் பசுமையாகும் பொழுது அதனை பதிவு செய்வோம்

Sunday, January 9, 2011

சிந்தனை

நல்ல வழியில் செலுத்தபடும் சிந்தனை ஆக்கபூர்வமாகும்,
தீய வழியில் செலுத்தபடும் சிந்தனை அழிவாகும்.
தன் சிந்தனை அருகில் இருப்பவனுக்கு தெரியாது,
இது எவ்வளவு பெரிய வலிமை ஒருவனுக்கு.
பிடிக்காதவன் அருகில் அம்ர்ந்து கூட அவனுக்கு பிடித்த மாதிரி பேச முடியும்.
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது ஆணின்;
இயற்கை அழகைக் கண்டவுடன் ஒரு ஓவியனின், ஒரு கவிஞனின்;
சிந்தனை எங்கெல்லாம் செல்லுமோ, அது எவருக்கும் தெரியாது.

எதனைத் தேடுகிறேன்

கற்றது பொறியியல், வேலை
கிடைத்தது மென்பொருள் துறையில்
இழந்து தவிப்பது தமிழ்நாட்டு உணவை, சென்ற ஆண்டுவரை
மறந்தது தமிழ் படிப்பதை, அலுவலகத்தில்
பேசுவது போலியாய் ஆங்கிலம், தமிழ் நண்பனிடம் கூட
சொல்வது ஹாய் , மறந்தும்கூட
சொல்வதில்லை வணக்கமென்று

இன்பம் - துன்பம்


நீ ஏன் இன்பத்தை அதிகம் வெளிக்காட்டுவது இல்லை என்றனர்
நான் துன்பத்தை வெளிக்காட்டியதைப் பார்த்திருக்கிறீர்களா என்றேன்
இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார் வள்ளுவர்,
இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், என்கிறது துறவு.
இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம் சிக்கிக் கொண்ட கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை
இவன் எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா :)
ஒன்றுமில்லை நான் சொல்ல விரும்புவது இதைத்தான்
இன்பம் வரும்பொழுது விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமலும்
துன்பம் வரும் துவண்டு விழாமலும் இருங்கள்
மேலும் இன்பம் வரும்பொழுது ரசிக்கிறேன் என்று அடுத்தர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்


Wednesday, January 5, 2011

மனிதன் புவியின் புற்று நோய்

மனிதன் கோபம் கொள்ளும் சில வேளையிலே மற்ற உயிரினங்களின் பெயரைக் கொண்டு திட்டுகிறான்;

மற்ற உயிரினங்கள் கோபம் கொள்ளும் எல்லா வேளையிலுமே மனிதா என்று திட்டுமோ?

தான் ஒருவன் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட மனிதன் புவியை அழித்திக்கொண்டிருக்கிறான்;

காற்று மாசுருதல், பருவநிலை மாற்றம், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றால் பல உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன, மேலும் அழியப் போகின்றன;

மனிதன் செய்கின்ற தவறுக்காக மற்ற உயிரினங்கள் அழிய வேண்டுமா?

Tuesday, December 28, 2010

தமிழ் பெயர்கள் - 1

எனக்கு பிடித்த தமிழ் பெயர்கள் - உயிர் எழுத்துக்களில்.
பல இணைய தளங்களில் இருந்து சேகரிக்கப் பட்டது.

அகம் -உள், உள்ளம், இல், காதல்
ஆண்: அகக்கதிர், அகத்தியன், அகன், அகமினியன், அகவிழியன், அகவெழில்
பெண்: அகத்தமிழ், அகமினியள், அகவிழி

அகரம் -
ஆண்: அகரச்சுடர், அகரன், அகரச்செல்வன், அகரச்செழியன், அகரநிலவன், அகரப்புகழ், அகரப்பொழிலன், அகரமுகிலன், அகரமுதல்வன், அகரவமுதன், அகரவிழியன், அகரவினியன், அகரவெழிலன்
பெண்: அகரத்தமிழ், அகரச்செல்வி, அகரவமுதா, அகரவிழி, அகரவினியள்

அமர் - விருப்பம், போர்
ஆண்: அமரன்

அம் - அழகு
பெண்: அங்கதிர், அங்கயல், அந்தமிழ், அந்தழல், அந்தழை, அம்புகழ், அம்மொழி

அமுதம் - இனிமை
ஆண்: அமுதன், அமுதவிழியன், அமுதினியன், அமுதச்செல்வன், அமுதச்செழியன்
பெண்: அமுதணி, அமுதா, அமுதவில், அமுதவிழி, அமுதிழை, அமுதினி, அமுதெழில், அமுதச்செல்வி

அழகு
ஆண்: அழகமுதன், அழகினியன்
பெண்: அழகரசி, அழகினியள், அழல்விழி, அழகமுதா

இசை
ஆண்: இசைச்செல்வன்
பெண்: இசைச்செல்வி, இசைத்தமிழ், இசையெழில்

இலக்கியம்
ஆண்: இலக்கியன்
பெண்: இலக்கியா

இளமை
ஆண்: இளஞ்செழியன், இளமாறன்
பெண்: இளந்தமிழ், இளந்தழை, இளமொழி, இளவேனில், இளவாணி

இனிமை
ஆண்: இன்னமுதன், இனியன்
பெண்: இன்மொழி, இன்னமுதா, இனியள்

உழவு
ஆண்: உழவமுதன்
பெண்: உழவமுதா

எழில்
ஆண்: எழிலன், எழில்விழியன், எழிலமுதன், எழிலரசன், எழிலினியன்
பெண்: எழில், எழில்விழி, எழிலமுதா, எழிலரசி, எழிலிசை, எழிலிழை, எழிலினி, எழிலினியள், எழினி

ஏர் - அழகு
பெண்: ஏர்மதி, ஏர்மயில்

ஓவியம்
பெண்: ஓவியா


மெய் எழுத்துக்கள் தொடரும்....

Sunday, December 26, 2010

எங்கேயும் காதல் பாடல்


மீண்டும் தாமரையின் வரிகள்...

ஆண்:
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்
றும் பேச
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்

காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே

கடற்கரையில் அதன் மணல்வெளியில் காற்றோடு காற்றாக
பல குரல்கள், பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும்

விடியலிலும் நாடு இரவிலும்
இது ஓயாதே இது ஓயாதே

சிரிப்பினிலும் பல சிணுங்கலிலும்
இது கலந்து காத்திருக்கும்

ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காதே கண்கள் தூங்காதே


எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்

அடம்பிடிக்கும் இது வடம் இழுக்கும்,யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலை குடுக்கும் , இது புரண்டு தீர்திடுமே


முகங்களையோ உடல் நிரங்கலையோ, இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலும் ஒரு உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே

யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கு பூந்தோட்டம் உண்டாகும் பூமி திண்டாடும்

ஆண்:

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச

பெண்:
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத

ஆண்:
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட

பெண் :
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்

காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே

Saturday, December 25, 2010

நீண்ட இடைவேளை :)



நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு இடுகை. நான் மைசூரில் இருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்து விட்டேன். வாகன நெரிசலும் குளிரும் இங்கே அதிகம். மற்றவைகள் இங்கே நலம்.


Tuesday, March 16, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - ஓசானா

நன்றி திருமதி தாமரை அவர்கள் ... தொடர்ந்து உன்னதமான வரிகளில் எங்கள் உள்ளங்களை மகிழ வைதுக்கொண்டிருபதர்க்கு .............Rap lyrics by blaze ......


ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே!?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே !

Ohhh... ஒ சானா ... ஒ சானா .. ஒ ஹோ ஹோ ..
Ohhh... ஒ சானா ... ஒ சானா .. ஒ ஹோ ஹோ ..

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே ..
ஒ வானம் தீண்டி வந்தாச்சு அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே ..
ஒ சானா .. என் வாசல் தாண்டி போனாலே .. ஒ சானா .. வேறொன்றும் செய்யாமலே ..
நான் ஆடி போகிறேன் .. சுக்கு நூறு ஆகிறேன் .. அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ..

ஒ சானா .. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன் ..
ஒ சானா .. சாவுக்கும் பக்கம் நின்றேன் ..
ஒ சானா .. ஏன் என்றால் காதல் என்பேன் .. ஒ சானா .. ஒ ...ஒ ..

Everybody wanna know how I feel like, feel like,
I really wanna be here with you.
Its not enough to say that we are made for each other its love ....that is Hosannah true. Hosannah, will be there when you're calling out my name.
Hosannah, feeling like my whole life has changed.
I never wanna be the same, its time we rearrange.
I take a step, you take a step and I'm here calling out to you..
Helloooo, Halloooo, Halooo.. Hosannah..

ஒ சானா .. ஒ .. ஹோ ஹோ ஹோ ...
ஒ சானா .. ஒ .. ஹோ ஹோ ஹோ ...


வண்ண வண்ண பட்டுபூச்சி பூத்தேடி பூத்தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ ..சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கு எங்கோ நகர்கின்றதே
ஒ சானா , பட்டுபூச்சி வந்தாச்சா ?
ஒ சானா , மேகம் உன்னை தொட்டாச்சா?


கிளிஞ்சல் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்
ஹலோ , Halooo.. ஒ சானா ..

ஒ சானா , என் மீது அன்பு கொள்ள
ஒ சானா , என்னோடு சேர்ந்து செல்ல
ஒ சானா , உம் என்று சொல்லு போதும் . ஒ சானா , ஒ ஹோ

ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே !?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே !

ஏன் இதயம் உடைத்தாய் , நொறுங்கவே !?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே !

Thursday, October 1, 2009

தசரா






மைசூர் தசரா கொண்டாட்டத்தின் பொழுது நானும் நண்பர்களும் மைசூர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அதில் சில புகைப்படங்கள்.

Wednesday, September 30, 2009

புகைப்படம்


என்னிடம் Canon S3IS Camera இருக்கிறது. புகைப்படம் எடுப்பதில் சிறிய ஆர்வம்.
நான் எடுத்த சிறந்த புகைப்படமாக இதைக் கருதுகிறேன்.

Carrom


அலுவகத்தில் நடந்த Carrom போட்டியில் நான் அரையிறுதி வரை சென்றேன். மூன்று சுற்றுகள் அதன் பிறகு காலிறுதி, இப்படியாக வெற்றிப் பெற்று அரையிறுதி வரை சென்றேன். :-) நம்ப முடியவில்லை தான்.

Monday, August 10, 2009

இறந்து போன காலங்கள்


அண்மையில் என் மாமா பையன் கல்யாணத்திற்கு போயிருந்தேன். என் சிறுவயது ஞாபகங்கள் நினைவிற்கு வந்தன.

சிறு வயதில் உறவுக்காரச் சிறுவர்களுடன் கல்யாண மண்டபத்தில் ஓடி விளையாடியது,
மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் அருகே அமர்ந்து காரில் வந்தது,
ஒரு சிறு குழு அமைத்து அனைவருக்கும் தேனீர் கோப்பைகள் அளித்தது,
இரவு கண் விழித்து தேங்காய் பொட்டலங்கள் செய்தது,
வீடியோவில் வருவதற்காக மேடையிலேயே நின்றது

இது மாதிரி பல நிகழ்வுகள் நினைவலைகளில் ஓடியது. இப்போது நினைத்தாலும் அந்த சிறுவயது காலங்கள் மாதிரி ஓடி விளையாட முடியாது. ஒரு அருமையான திரைப்பாடல் நினைவிற்கு வந்தது.

"துள்ளித் திறிந்ததொரு காலம், பள்ளிப் பயின்றதொரு காலம்,
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே..."

என்னை பொறுத்தவரை அது நான் இப்போது இழக்கின்ற காலம் :-(

Sunday, August 9, 2009

தமிழ் உள்ளிடு செய்யும் முறைகள்

உபுண்டு:
scim முறையில் தமிழ் உள்ளிடு செய்வது பற்றி இந்த இணையத்தில் காண்க:
http://www.tamiltech.info/magazine/archives/ubuntu-linux-in-tamil/

விண்டோஸ்:
NHM writer மூலம் விண்டோஸில் தமிழில் உள்ளிடு செய்யலாம்
http://software.nhm.in/products/writer
இணையம்:
http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம்
நெருப்பு நரி ;-) அதாங்க firefox:
தமிழ்விசை என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994

தமிழோசை உலகெங்கும் பரவச் செய்வோம் :-)
வாழ்க தமிழ் வளர்க தமிழ்

இந்தியா

இந்தியாவில் பிறந்ததிற்காக பெருமைப் படுகின்றேன்!
இந்தியாவில் வாழ்வதற்கும் விரும்புகின்றேன்!
இந்தியாவை யார் குறைக் கூறினாலும்!
இந்தியாவின் மீதுள்ள நேசம் குறையவில்லை!
அயல் நாட்டு மோகத்தை யார் விதைத்தாலும்!
அங்கு சென்று வாழ விருப்பமில்லை!
தாய் நாட்டையும், தாய் மொழியையும் விட்டு பிறியலாகுமோ!!

Wednesday, July 15, 2009

தவறு


நான் காலையில் என் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பள்ளிச் சிறுவன் கைக்காட்டினான். சில நொடிகளுக்குப் பின்னர் தான் நான் அதனை உணர்ந்தேன். அதற்குள் நான் ஒரு 10அடி தூரம் தள்ளி வந்துவிட்டேன். திரும்பி சென்று அந்த சிறுவனை கூட்டி வரலாமென்றுப் பார்த்தேன். ஆனால் என் கைக்கடிகாரத்தை பார்த்தேன் மணி 9:20. அலுவலகத்திற்கு தாமதம் ஆகிவிடும், சரி வேண்டாமென்று வந்துவிட்டேன்.

அலுவலகம் வந்த பிறகும் அந்த சிறுவனின் முகம் எனக்கு மறக்கவேயில்லை. அவன் முகத்தில் ஒரு சோகம் இருந்தது. பள்ளிக்கு தாமதம் ஆகிவிட்டதென்று சோகமா? தாமதமாக சென்றால் ஆசிரியர் திட்டுவாரென்ற பயமா? தந்தையோ தாயோ பள்ளி வரை தன்னை விட்டுச் செல்ல இன்று வரவில்லையே என்ற கோபமா? பேருந்தை விட்டுவிட்டோமே என்ற எரிச்சலா?
தெரியவில்லை!!

ஆனால் ஏதோ தவறு செய்து விட்டோமென்ற உறுத்தல் அன்று முழுவதும் இருந்துக் கொண்டேயிருந்தது!

Saturday, July 11, 2009

தூக்கம்


நான் வேண்டும் பொழுது சில நேரங்களில் நீ என்னை தழுவுவதில்லை,
பிற்பகல் உணவிற்கு பின் தவறாமல் என்னைத் தழுவப் பார்கின்றாய்
நீ இரவில் தவறினால், பகலில் எனக்கு சோர்வு எரிச்சல் களைப்பு
வார இறுதியில் பிற்பகல் நீ ஆட்கொண்டால், வார நாட்களில் ஒரு புதிய புத்துணர்ச்சி,
தேர்வு நேரங்களில் உன்னை கட்டுப்படுத்த இரவில் தேனீர்,
விடுமுறை நாட்களில் நீ நிறைவாக வந்ததால் என் பெயரானது சோம்பேறி!
அளவாக நீ என் வாழ்வில் இருந்தால் நான் வளமோடு வாழ்வேன் :-)

Tuesday, June 30, 2009

பருவ மழை

பருவ மழையே! நீ வரத் தாமதமானதால்
வீசுகிறது வெப்ப காற்று! தடை படுகிறது மின்சாரம்!
நீ வந்துவிட்டாய் என்றனர் சிலர் கோடை மழையைப் பார்த்து!
நீ வரமாட்டாயா என்று சிலர் கவிதைகள் இயற்றினர்!
அதில் நானும் ஒருவனாக முயன்று கொண்டிருக்கும் பொழுது ;-)
வெளியே மண்வாசணை! சென்று பார்த்தேன் கருமேகங்கள்
அண்ணாந்து பார்த்தேன் கண்ணில் மழைத்துளிகள்
வந்தது பருவமழை :-)

Saturday, June 20, 2009

சொந்த ஊர்




திருச்சிராப்பள்ளி:
(கட்டற்ற கலைக்களைஞ்சிமான விக்கிப்பீடியாவில் இருந்து)

திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள 4 முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள்.

திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

பெயர் காரணம்

திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

ஆறுகள்

திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.

அணைகள்

கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.

மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.