மைசூர் தசரா கொண்டாட்டத்தின் பொழுது நானும் நண்பர்களும் மைசூர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அதில் சில புகைப்படங்கள்.
தேடுங்கள்
Thursday, October 1, 2009
தசரா
மைசூர் தசரா கொண்டாட்டத்தின் பொழுது நானும் நண்பர்களும் மைசூர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அதில் சில புகைப்படங்கள்.
Wednesday, September 30, 2009
புகைப்படம்
Carrom
Monday, August 10, 2009
இறந்து போன காலங்கள்

அண்மையில் என் மாமா பையன் கல்யாணத்திற்கு போயிருந்தேன். என் சிறுவயது ஞாபகங்கள் நினைவிற்கு வந்தன.
சிறு வயதில் உறவுக்காரச் சிறுவர்களுடன் கல்யாண மண்டபத்தில் ஓடி விளையாடியது,
மாப்பிள்ளை அழைப்பில் மணமகன் அருகே அமர்ந்து காரில் வந்தது,
ஒரு சிறு குழு அமைத்து அனைவருக்கும் தேனீர் கோப்பைகள் அளித்தது,
இரவு கண் விழித்து தேங்காய் பொட்டலங்கள் செய்தது,
வீடியோவில் வருவதற்காக மேடையிலேயே நின்றது

இது மாதிரி பல நிகழ்வுகள் நினைவலைகளில் ஓடியது. இப்போது நினைத்தாலும் அந்த சிறுவயது காலங்கள் மாதிரி ஓடி விளையாட முடியாது. ஒரு அருமையான திரைப்பாடல் நினைவிற்கு வந்தது.
"துள்ளித் திறிந்ததொரு காலம், பள்ளிப் பயின்றதொரு காலம்,
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே..."
என்னை பொறுத்தவரை அது நான் இப்போது இழக்கின்ற காலம் :-(
Sunday, August 9, 2009
தமிழ் உள்ளிடு செய்யும் முறைகள்
scim முறையில் தமிழ் உள்ளிடு செய்வது பற்றி இந்த இணையத்தில் காண்க:
http://www.tamiltech.info/magazine/archives/ubuntu-linux-in-tamil/
விண்டோஸ்:
NHM writer மூலம் விண்டோஸில் தமிழில் உள்ளிடு செய்யலாம்
http://software.nhm.in/products/writer
இணையம்:
http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம்
நெருப்பு நரி ;-) அதாங்க firefox:
தமிழ்விசை என்ற நீட்சியை பயர்பாக்ஸ் உலாவியில் நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
தமிழோசை உலகெங்கும் பரவச் செய்வோம் :-)
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இந்தியா
Wednesday, July 15, 2009
தவறு

நான் காலையில் என் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பள்ளிச் சிறுவன் கைக்காட்டினான். சில நொடிகளுக்குப் பின்னர் தான் நான் அதனை உணர்ந்தேன். அதற்குள் நான் ஒரு 10அடி தூரம் தள்ளி வந்துவிட்டேன். திரும்பி சென்று அந்த சிறுவனை கூட்டி வரலாமென்றுப் பார்த்தேன். ஆனால் என் கைக்கடிகாரத்தை பார்த்தேன் மணி 9:20. அலுவலகத்திற்கு தாமதம் ஆகிவிடும், சரி வேண்டாமென்று வந்துவிட்டேன்.
அலுவலகம் வந்த பிறகும் அந்த சிறுவனின் முகம் எனக்கு மறக்கவேயில்லை. அவன் முகத்தில் ஒரு சோகம் இருந்தது. பள்ளிக்கு தாமதம் ஆகிவிட்டதென்று சோகமா? தாமதமாக சென்றால் ஆசிரியர் திட்டுவாரென்ற பயமா? தந்தையோ தாயோ பள்ளி வரை தன்னை விட்டுச் செல்ல இன்று வரவில்லையே என்ற கோபமா? பேருந்தை விட்டுவிட்டோமே என்ற எரிச்சலா?
தெரியவில்லை!!
ஆனால் ஏதோ தவறு செய்து விட்டோமென்ற உறுத்தல் அன்று முழுவதும் இருந்துக் கொண்டேயிருந்தது!
Saturday, July 11, 2009
தூக்கம்

நான் வேண்டும் பொழுது சில நேரங்களில் நீ என்னை தழுவுவதில்லை,
பிற்பகல் உணவிற்கு பின் தவறாமல் என்னைத் தழுவப் பார்கின்றாய்
நீ இரவில் தவறினால், பகலில் எனக்கு சோர்வு எரிச்சல் களைப்பு
வார இறுதியில் பிற்பகல் நீ ஆட்கொண்டால், வார நாட்களில் ஒரு புதிய புத்துணர்ச்சி,
தேர்வு நேரங்களில் உன்னை கட்டுப்படுத்த இரவில் தேனீர்,
விடுமுறை நாட்களில் நீ நிறைவாக வந்ததால் என் பெயரானது சோம்பேறி!
அளவாக நீ என் வாழ்வில் இருந்தால் நான் வளமோடு வாழ்வேன் :-)
Tuesday, June 30, 2009
பருவ மழை

வீசுகிறது வெப்ப காற்று! தடை படுகிறது மின்சாரம்!
நீ வந்துவிட்டாய் என்றனர் சிலர் கோடை மழையைப் பார்த்து!
நீ வரமாட்டாயா என்று சிலர் கவிதைகள் இயற்றினர்!
அதில் நானும் ஒருவனாக முயன்று கொண்டிருக்கும் பொழுது ;-)
வெளியே மண்வாசணை! சென்று பார்த்தேன் கருமேகங்கள்
அண்ணாந்து பார்த்தேன் கண்ணில் மழைத்துளிகள்
வந்தது பருவமழை :-)
Saturday, June 20, 2009
சொந்த ஊர்


திருச்சிராப்பள்ளி:
(கட்டற்ற கலைக்களைஞ்சிமான விக்கிப்பீடியாவில் இருந்து)
திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள 4 முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள்.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.
பெயர் காரணம்
திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
ஆறுகள்
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. கல்லணையும் மேலணையும் இம்மாவட்டத்தின் புராதன அணைக் கட்டுகளாகும். திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக் கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.
அணைகள்
கல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.
மேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.
கவிதை முயற்சி ;-)

நான் இதுவரை காதலித்தது இல்லை என்றாலும் ஒவ்வொருவனுக்கும் தன் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள் இருக்கும். அதில் ஒன்று.
"நான் காலையில் விழித்தெழும் பொழுது அவள் கூந்தல் என் முகத்தில் படர்ந்திருக்க,
எனக்கு ஒரு புதிய புத்துணர்ச்சி அவள் கூந்தலின் மென்மை அளிக்க,
என் தோளில் முகம் பதித்திருந்த அவள் ஒரு கையினால் எனை அணைத்திருக்க,
நான் விழித்ததை உணர்ந்த அவள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று உரைக்க,
நானும் தான் என்றேன் அவள் நெற்றியில் முத்தமிட்டபடி"
Friday, June 19, 2009
தேனீர் பிறந்த கதை

மூலிகை மருத்துவத்திற்குப் புகழ் பெற்றது சீனா. சீனாவின் சக்கரவர்த்தியான பிஷன் நுங் என்பவர் ஏராளமான செடிகளின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தவர். இதனால் இவர் தெய்வீக மருத்துவர் என்று சீன வரலாற்றில் குறிக்கப்படுகிறார். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் இவர்தான். இவர் ஒருமுறை தமது படைமுகாம் அருகே ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். அருகில்இருந்த சில செடிகள்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டன.
தண்ணீரைக் கொதிக்க வைத்த போது அடுப்பில் இருந்த செடிகளில் இருந்த இலைகள் காற்றில் பறந்து பாத்திரத்தினுள் விழுந்தன. தண்ணீர் அசுத்தமாகி விட்டதே என்று நினைத்த சக்கரவர்த்தி அதைக் கொட்ட முயற்சித்தார். ஆனால் பாத்திரத்தில் இருந்து வந்த ஒருவித நறுமணம் அவரைத் தடுத்தது. அந்தத் தண்ணீரையே குடித்தார். அது சுவையாகவும், உடலுக்கு சற்று உற்சாகத்தையும் கொடுத்தது. இதுதான் தேனீர் பிறந்த கதை.
நன்றி: தினகரன் இணையம்
உபுண்டு லினக்ஸ்

தமிழ் ஆர்வத்துக்கு என் கல்லூரி நண்பனும், உபுண்டுவும் கூட காரணம். உபுண்டுவை தமிழில் உபயோகப் படுத்தலாம். மெனு, ஆப்ஷன்ஸ் எல்லாம் தமிழில் வரும். SCIM மூலம் தமிழில் டைப் செய்வது மிக சுலபம். தமிழ் தட்டச்சு முறை மூலமும், phonetic முறை மூலமும் டைப் செய்யலாம்.
டைப் செய்வது விண்டோஸ்லியே சுலபம் என்கிறீர்களா.
நீங்கள் லினக்ஸ் உபயோகித்தால், அதன் முழு உறிமையும் உங்களுக்கு
வின்டோஸ்ல அது கிடையாது. நீங்கள் வாடகைக்கு வாங்குன மாதிரி தான்.
குனு பற்றி அறிய இந்த இணையங்களை பாருங்கள்.
http://www.gnu.org/philosophy/free-sw.ta.html
http://www.gnu.org/home.ta.html
http://ubuntu-tam.org/vaasal/
http://amachu.net/blog/?p=96
மேலும் என் நண்பனின் இணையதளம்
http://amachu.net/blog/
கொட்டாவி

கொட்டாவி பற்றி வலையில் சுட்டது ;-)
கொட்டாவி. இந்த வார்த்தையைப் படித்து உள்வாங்கிகொண்ட ஒரு சில நொடிகளிலேயே கொட்டாவி விட்டவரா நீங்கள் ? அப்படின்னா நீங்களும் நம்மள மாதிரிதான்.திருவண்ணாமலைய (பேரரசு படமில்ல) நினைச்சாலே முக்தியாம். அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மைங்கிறது, நான் அனுபவிச்சதில்ல. ஆனா, கொட்டாவியை பத்தி நினைச்சாலே, கொட்டாவியா வரும். நினைக்க நினைக்க, அதுவும் வந்துக்கிட்டேயிருக்கும். சரி. இதனால, எதாவது உபயோகம் இருக்குதா பாஸ்னு கேட்கற யூத்துங்க மட்டும் காதைக்கொடுங்க. இப்ப பஸ்ஸில போயிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு பிகர் நம்மளப் பாக்குதா,இல்லயான்னு தெரியாத அளவுக்கு ரொம்ப கெத்தா இருக்குது. அதைக் கண்டுபிடிக்கத்தான் இந்த கொட்டாவி டெக்னிக். நீங்க கொட்டாவி விட்டுட்டு,கொஞ்ச நேரம் அந்தப் பொண்ணையே கவனிச்சுப்பாருங்க. அட, நைஸாத்தான். உடனே, அந்தப்பொண்ணும் கொட்டாவி விட்டாலோ, இல்ல நாசுக்கா அதை சமாளிச்சாலோ, உடனே பம்பாய் படத்தில அர்விந்தசாமி மனிஷா கொய்ராலவ பாக்கிற மாதிரி( கண்ணாளனே.. பாட்டில்)கெத்தாப் பருங்க. நான் எங்கப்போறது கொட்டாவிக்குன்னு யாராவது கேட்கிறீங்களா என்ன? அதான் பாஸ், நினைச்சாலே முக்தி ச்சீ..கொட்டாவி வருமே.
முதல் கவிதை ;-)

நான் 7ஆம் வகுப்பு படிக்கும் போது எழுதியது...
பணத்தை தேடித் தேடி அலைந்தான்
பிணமாக மூடி மூடி மறைந்தான்
இது கவிதையானு எனக்கு தெரியல ;-)
சரி எதோ கிறுக்க ஆரம்பிச்சு இப்போ ஓரளவுக்கு வந்திருப்பேனு நெனசீங்கனா... சுத்தமா தப்பு ;-)
தமிழ் ஆசிரியர்களின் போக்கு, தமிழ் பரீட்சை.. இவை இரண்டும் என் தமிழ் ஆர்வத்தை குறைத்து விட்டன. எவலோ தான் கஷ்டப்பட்டு எழுதினாலும் தமிழ்ல மார்க் வராது. மேலும் பிற்காலத்தில் வேலை கிடைக்க கணிதம், அறிவியல் தான் முக்கியம்கற எண்ணமும் தமிழ் ஆர்வத்தை குறைத்தன.
ஆனால் இபோது எனக்கு பிடித்த கணினி, வலையில் தமிழை பார்த்தும், படித்தும் தமிழ் ஆர்வம் பொங்க ஆரம்பித்து இருகிறது :-)
இதுவே நான் இந்த வலைபூ ஆரம்பிக்க காரணம்.